தமிழ்த்துறை

தமிழ் ஒருமொழிப்பாடம் என்பதால் தமிழ் இலக்கியம் படித்து சிறப்பான தகுதி பெற்று வெற்றி பெறுகின்றவர்களுக்கு பள்ளிகளில் ஆசிரியர்களாகவும், கல்லூரிகளில் பேராசிரியர்களாகவும் பணிபுரிவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். இலக்கியப் புலமைதனை வளர்த்துக் கொண்டால் சிறந்த படைப்பாளராகவும், பேச்சாளராகவும், மொழி பெயர்ப்பாளராகவும், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் இதழ்கள் ஆகிய ஊடகங்களில் செய்தியாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், ஒருங்கினணப்பாளர், அறிவிப்பாளர் போன்ற பணிகளிலும் இத்துறையில் பயின்றவர்களுக்கு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. மேலும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் இடம்பெற்றுள்ள தமிழ்த்துறை மற்றும் தமிழ் உயர் ஆய்வு மையங்களில் ஆய்வுப்பணி, விரிவுரையாளர் பணி போன்ற பணி வாய்ப்புகளைப் பெற இந்த உலகமயச் சூழலில் வாய்ப்புகள் பல்கிப் பெருகி உள்ளன.

இலக்கியம் படிக்கும் மாணவர்கள் இலக்கியப் புலமையை வளர்த்துக் கொள்வதற்கு தகுந்த பேராசிரியர்களும், சிறந்த நூலக வசதியும் இத்துறையில் வாய்க்கப் பெற்றுள்ளமை பயிலும் மாணவர்களுக்கு உதவியாக அமைந்துள்ளது இந்நிறுவனத்தின் சிறப்பாகும்.

பல்வேறு இலக்கியப் போட்டிகளையும், கருத்தரங்குகளையும் நடத்துவதுடன், மாணவர்களுக்கு பல்வேறு கல்லூரிகளுக்கு இடையேயும், பல்கலைக் கழகங்களுக்கு இடையேயும் நடைபெறும் இலக்கியப் போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெறுவதற்கு பயிற்சியும், ஊக்கமும் அளிக்கப்படுகிறது.

பி.லிட். பட்டம் பெற்ற பிறகு முதுகலை தமிழ் இலக்கியம் உள்ளிட்ட எந்த ஒரு கலைசார் முதுகலையும் பயில்வதற்கு இயலும். மேலும் ஓராண்டு புலவர் பட்டயம் பயின்றால் ஆசிரியர் பயிற்சிப் பட்டம் பெறாமலேயே பள்ளிகளில் ஆசிரியர் பணியினைப் பெறலாம்.

Programs Offered
  • B.Lit.,