தமிழ்த்துறை
தமிழ் ஒருமொழிப்பாடம் என்பதால் தமிழ் இலக்கியம் படித்து சிறப்பான தகுதி பெற்று வெற்றி பெறுகின்றவர்களுக்கு பள்ளிகளில் ஆசிரியர்களாகவும், கல்லூரிகளில் பேராசிரியர்களாகவும் பணிபுரிவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். இலக்கியப் புலமைதனை வளர்த்துக் கொண்டால் சிறந்த படைப்பாளராகவும், பேச்சாளராகவும், மொழி பெயர்ப்பாளராகவும், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் மற்றும் இதழ்கள் ஆகிய ஊடகங்களில் செய்தியாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், ஒருங்கினணப்பாளர், அறிவிப்பாளர் போன்ற பணிகளிலும் இத்துறையில் பயின்றவர்களுக்கு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. மேலும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் இடம்பெற்றுள்ள தமிழ்த்துறை மற்றும் தமிழ் உயர் ஆய்வு மையங்களில் ஆய்வுப்பணி, விரிவுரையாளர் பணி போன்ற பணி வாய்ப்புகளைப் பெற இந்த உலகமயச் சூழலில் வாய்ப்புகள் பல்கிப் பெருகி உள்ளன.
இலக்கியம் படிக்கும் மாணவர்கள் இலக்கியப் புலமையை வளர்த்துக் கொள்வதற்கு தகுந்த பேராசிரியர்களும், சிறந்த நூலக வசதியும் இத்துறையில் வாய்க்கப் பெற்றுள்ளமை பயிலும் மாணவர்களுக்கு உதவியாக அமைந்துள்ளது இந்நிறுவனத்தின் சிறப்பாகும்.
பல்வேறு இலக்கியப் போட்டிகளையும், கருத்தரங்குகளையும் நடத்துவதுடன், மாணவர்களுக்கு பல்வேறு கல்லூரிகளுக்கு இடையேயும், பல்கலைக் கழகங்களுக்கு இடையேயும் நடைபெறும் இலக்கியப் போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெறுவதற்கு பயிற்சியும், ஊக்கமும் அளிக்கப்படுகிறது.
பி.லிட். பட்டம் பெற்ற பிறகு முதுகலை தமிழ் இலக்கியம் உள்ளிட்ட எந்த ஒரு கலைசார் முதுகலையும் பயில்வதற்கு இயலும். மேலும் ஓராண்டு புலவர் பட்டயம் பயின்றால் ஆசிரியர் பயிற்சிப் பட்டம் பெறாமலேயே பள்ளிகளில் ஆசிரியர் பணியினைப் பெறலாம்.
கற்பிக்கப்படும் பாடப்பிரிவு :
பி.லிட்., தமிழ்: 10+2ல் தமிழை மொழித் தாளாகக் கொண்டு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
பிஎச்.டி., தமிழ்
துறைத்தலைவர்:
முனைவர். வீ. வெற்றிவேல் எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி.
தலைவர் மற்றும் உதவிப்பேராசிரியர்
உதவிப்பேராசிரியர்கள்:
முனைவர். ம. பூபதி எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி.
உதவிப்பேராசிரியர்
முனைவர். தி. சங்கீதா எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி.
உதவிப்பேராசிரியர்
முனைவர். இரா. சித்திரவேலு எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி.
உதவிப்பேராசிரியர்
முனைவர். கி. உஷா எம்.ஏ., எம்.பில்., பி.எச்.டி.
உதவிப்பேராசிரியர்
முனைவர் சி.செல்வம் எம்.ஏ., எம்.பில்., பி.எச்.டி.
உதவிப்பேராசிரியர்
முனைவர் க.இராமதுரை எம்.ஏ., எம்.பில்., பி.எச்.டி.
உதவிப்பேராசிரியர்
- தமிழ்த்துறை சார்பில் “கவியரங்க பயிற்சி பட்டறை விழா” 27.03.2020 நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தஞ்சை ரோட்ராக்ட் உறுப்பினரும் கவிஞருமான தஞ்சை இனியன் அவர்கள் கலந்து கொண்டு மாணவ-மாணவியரின் கவித்திறன் குறித்து சிறப்புரை வழங்கினார்.
- தமிழ்த்துறை சார்பாக “காப்பியங்கள் காட்டும் வாழ்வியல் சிந்தனைகள்” என்னும் தலைப்பில் கருத்தரங்கம் 28.10.2021 வியாழக்கிழமை முற்பகல் 12.00 மணியளவில் கல்லூரிக்கலையரங்கில் நடைபெற்றது.இக்கருத்தரங்க விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்ப்பல்கலைக்கழக அயல்நாட்டுத்தமிழ்க்கல்வியியல் துறைப்பேராசிரியரும் துறைத்தலைவருமான முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் அவர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கிச் சிறப்பித்தார்.
மருதுபாண்டியர் கல்லூரியில் இளங்கலைப் பட்டவகுப்பு 2004 ஆம் கல்வியாண்டில் தமிழ்த்துறையில் தொடங்கப்பட்டது. இத்துறையில் நூற்றுக்கும்மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர். தற்பொழுதும் தொடர்ந்து பயின்றுவருகின்றனர். 2014ஆம் ஆண்டுமுதல் தமிழ் உயராய்வுத்துறை தொடங்கப்பட்டு இன்னாள் வரை பத்துமுனைவர் பட்ட ஆய்வுமாணவர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். 20க்கும் மேற்பட்ட முனைவர்பட்ட ஆய்வு மாணவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இலக்கியம் படிக்கும் மாணவர்கள் இலக்கியப் புலமையை வளர்த்துக் கொள்வதற்கு தகுந்த பேராசிரியர்களும், சிறந்த நூலக வசதியும் இத்துறையில் வாய்க்கப் பெற்றுள்ளமை பயிலும் மாணவர்களுக்கு உதவியாக அமைந்துள்ளது இந்நிறுவனத்தின் சிறப்பாகும்.
பல்வேறு இலக்கியப் போட்டிகளையும், கருத்தரங்குகளையும் நடத்துவதுடன், மாணவர்களுக்கு பல்வேறு கல்லூரிகளுக்கு இடையேயும், பல்கலைக் கழகங்களுக்கு இடையேயும் நடைபெறும் இலக்கியப் போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெறுவதற்கு பயிற்சியும், ஊக்கமும் அளிக்கப்படுகிறது.
பி.லிட். பட்டம் பெற்ற பிறகு முதுகலை தமிழ் இலக்கியம் உள்ளிட்ட எந்த ஒரு கலைசார் முதுகலையும் பயில்வதற்கு இயலும். மேலும் ஓராண்டு புலவர் பட்டயம் பயின்றால் ஆசிரியர் பயிற்சிப் பட்டம் பெறாமலேயே பள்ளிகளில் ஆசிரியர் பணியினைப் பெறலாம்.
இந்த கல்வி ஆண்டில் (2021-2022) மூன்றாமாண்டு பி.லிட். தமிழ் இலக்கிய மாணவி மு. கார்த்திகா பல்கலைக்கழக அளவில் தரவரிசைப்பட்டியலில் 5வது இடத்தைப் பெற்றுள்ளார்.
மாணவர் பெயர் | பாடப்பிரிவு | கல்வியாண்டு | தற்போதைய நிலை | தொடர்பு எண் |
ஐ. தீபா | பி.லிட்., தமிழ் | 2019-2022 | உயர்கல்வி | 8489387370 |
ப. காயத்திரி | பி.லிட்., தமிழ் | 2019-2022 | உயர்கல்வி | 9342240894 |
மு. கார்த்திகா | பி.லிட்., தமிழ் | 2019-2022 | உயர்கல்வி | 9600476060 |
ரா. மல்லிகா | பி.லிட்., தமிழ் | 2019-2022 | உயர்கல்வி | 6374434605 |
ச. லீமா | பி.லிட்., தமிழ் | 2019-2022 | உயர்கல்வி | 8189976148 |
வீ. பிரதீப் | பி.லிட்., தமிழ் | 2019-2022 | உயர்கல்வி | 8610195507 |